தண்டராம்பட்டு அருகே முன்விரோத தகராறில் இளம்பெண் மீது தாக்குதல் தொழிலாளி கைது
தண்டராம்பட்டு அருகேயுள்ள மேல்சிறுபாக்கத்தை சேர்ந்தவர் ரேகா (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மேல்சிறுபாக்கம் முருகன் கோவில் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சுதாகர் (36) மற்றும் உறவினர் அன
தண்டராம்பட்டு,
தண்டராம்பட்டு அருகேயுள்ள மேல்சிறுபாக்கத்தை சேர்ந்தவர் ரேகா (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மேல்சிறுபாக்கம் முருகன் கோவில் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சுதாகர் (36) மற்றும் உறவினர் அனிதா ஆகியோர் முன்விரோதம் காரணமாக ரேகாவை வழிமடக்கி தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த ரேகா சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசில் ரேகா புகார் அளித்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தார்.