கழிப்பறைகளை பயன்படுத்த அறிவுரை: காரைக்குடி சுகாதார நகராட்சியாக விரைவில் அறிவிக்கப்படும் ஆணையாளர் விஜயலட்சுமி தகவல்

காரைக்குடி சுகாதார நகராட்சியாக விரைவில் அறிவிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். 100 சதவீத கழிப்பறைகள் காரைக்குடி நகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– காரைக்குடி நகராட்சி பகுதியில்

Update: 2016-12-22 23:00 GMT

காரைக்குடி,

காரைக்குடி சுகாதார நகராட்சியாக விரைவில் அறிவிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

100 சதவீத கழிப்பறைகள்

காரைக்குடி நகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

காரைக்குடி நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 100 சதவீதம், கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்றும், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதில்லை என்றும் அறிவிப்பு செய்யவும், காரைக்குடியை சுகாதார நகராட்சியாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நகராட்சியில் அமைந்துள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளிலும், வீடுகளிலும் கழிப்பறையை தான் பயன்படுத்தி வருகிறோம் என உறுதிமொழி நகராட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடியில் இயங்கும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளில், வீட்டு கழிப்பறை அல்லது அருகில் உள்ள சமுதாய, பொது கழிப்பறையையே பயன்படுத்தி வருகிறோம் என்று உறுதிமொழி அளித்துள்ளனர்.

சுகாதார நகராட்சி

மேலும் காரைக்குடி நகராட்சி மூலம் வார்டு வாரியான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியும், அதில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிப்பறைகள் அல்லது பொது கழிப்பறைகளையே பயன்படுத்துகின்றனர் என்ற விவரமும் சேகரிப்பட்டும், இனிவரும் காலங்களில் திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 100 சதவீதம் கழிப்பறையை தான் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், திறந்தவெளியை பயன்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு, காரைக்குடி சுகாதார நகராட்சியாக விரைவில் அறிவிப்பு செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் 10 நாட்களுக்குள் காரைக்குடி நகராட்சி ஆணையருக்கு கடிதம் அல்லது commr.karaikudi@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்