தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மீது நடவடிக்கை பாயுமா?

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனால் அவரது பதவிக்கு

Update: 2016-12-21 22:06 GMT
சென்னை,

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனால் அவரது பதவிக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உயர் பதவியில் இருப்பவர்கள் இதுபோன்ற சோதனைக்கு உட்படுத்தப்படும்போது, பணியிடமாற்றம் அல்லது இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு உண்டு. அவ்வாறு நடந்தால், அடுத்ததாக தலைமைச் செயலாளர் பதவிக்கு வருகிறவர் யார்? என்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது.

அந்த பட்டியலில், கூடுதல் தலைமைச் செயலாளர்களாக நில நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறையின் க.சண்முகம், மின்நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வி.கே.ஜெயக்கொடி, நெடுஞ்சாலைகள் துறையின் ராஜீவ் ரஞ்சன், வணிகவரிகள் ஆணையர் சி.சந்திரமவுலி ஆகியோர் உள்ளனர்.

அதிலும் முதன்மையான இடத்தில் சண்முகம், கிரிஜா வைத்தியநாதன் இருப்பதால் அவர்கள் இருவரில் ஒருவர் புதிய தலைமைச் செயலாளராக வாய்ப்பு அதிகமுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்