திருமுல்லைவாயல் அருகே இரவு பணியில் இருந்த 2 தொழிலாளர்களின் செல்போன்களை திருடியவர் கைது

திருமுல்லைவாயல் அருகே இரவு பணியில் இருந்த 2 தொழிலாளர்களின் செல்போன்களை திருடிக்கொண்டு ஓடியவரை தொழிலாளர்கள் விரட்டி சென்று பிடித்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2016-12-21 22:02 GMT
ஆவடி,

திருமுல்லைவாயல் அருகே இரவு பணியில் இருந்த 2 தொழிலாளர்களின் செல்போன்களை திருடிக்கொண்டு ஓடியவரை தொழிலாளர்கள் விரட்டி சென்று பிடித்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செல்போன் திருட்டு

திருமுல்லைவாயல் அருகே அண்ணனூர் ரெயில்வே ஸ்டேசன் சாலையை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 21). இவர், தனது நண்பர் செல்வக்குமார் என்பவருடன் அதே பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் நேற்று முன்தினம் இரவு வேலை செய்து கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அங்கு வைத்து இருந்த இவர்கள் 2 பேரின் செல்போன்களையும் திருடிக்கொண்டு தப்பி ஓடினார்.

திருடியவரை மடக்கிப்பிடித்தனர்

இதைப் பார்த்த அருண்குமார், செல்வக்குமார் ஆகியோர் அந்த நபரை மடக்கிப்பிடித்து திருமுல்லைவாயல் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியை சேர்ந்த மணி (42) என்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து மணியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்