கிணற்றில் தவறிவிழுந்த தொழிலாளி பலி

சங்ககிரி அருகே உள்ள மோரூர் கள்ளர் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 26), கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குடிபோதையில் இவர் அந்த பகுதியில் உள்ள ஊர்;

Update: 2016-12-21 22:30 GMT

சங்ககிரி அருகே உள்ள மோரூர் கள்ளர் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 26), கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குடிபோதையில் இவர் அந்த பகுதியில் உள்ள ஊர் பொதுக்கிணற்றில் தவறி விழுந்தார். 50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் தற்போது சுமார் 20 அடி அளவில் தண்ணீர் உள்ளது. இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சங்ககிரி தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்து வெங்கடேசின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்