எட்டயபுரத்தில் 2 மாணவர்கள் பலி: பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகை சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

எட்டயபுரம்,
எட்டயபுரம் அருகே பள்ளிக்கூட கிணற்றில் தவறி விழுந்து இறந்த 2 மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, பெற்றோர்கள் நேற்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 மாணவர்கள் பலி
எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈராலில் அரசு உதவி பெறும் தனியார் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு பக்கத்து ஊரான து.அருணாசலபுரத்தைச் சேர்ந்த பெத்துராஜ் மகன் சூர்யா (வயது 13), தமிழ்செல்வன் மகன் சேர்மத்துரை (13) ஆகிய 2 பேரும் 8–ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் கடந்த 18–ந்தேதி விடுமுறை நாளில் பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினர். எதிர்பாராதவிதமாக பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள கிணற்றில் சூர்யா, சேர்மத்துரை ஆகிய 2 பேரும் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 2 மாணவர்கள் உயிரிழந்ததால், பள்ளிக்கூடத்துக்கு கடந்த 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.
பள்ளிக்கூடம் முற்றுகை
நேற்று காலையில் பள்ளிக்கூடத்தை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பள்ளி நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பள்ளிக்கூடத்துக்கு தங்களது குழந்தைகளை அனுப்பாமல், பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர். உடனே தாசில்தார் பாக்கியலட்சுமி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தீர்வு ஏற்படவில்லை. பள்ளிக்கூடமும் திறக்கப்படவில்லை.
சமாதான பேச்சுவார்த்தை
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் மாலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தாசில்தார் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மாணிக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா, துணை தாசில்தார் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் வரதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பள்ளிக்கூட வளாகத்தில் கிணற்றை மூடாமல் அஜாக்கிரதையாக இருந்த பள்ளி நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்வது, பள்ளியில் புதிய கமிட்டி செயலாளர் நியமிக்கப்படும் வரையிலும் உதவி தொடக்க கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் பள்ளி செயல்படுவது, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவது, பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றை இன்று (வியாழக்கிழமை) மூடிய பின்னர் நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளிக்கூடத்தை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.