நாகர்கோவிலில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு தினமும் உடற்பயிற்சி செய்ய போலீசாருக்கு அறிவுரை

நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை பிரிவில், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. தினகரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீசாரிடம் தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என அறிவுரை வழங்கினார்.
ஆய்வு
போலீஸ் நிலையங்கள், போலீஸ் துறையை சேர்ந்த பிரிவுகள் ஆகியவற்றில் ஆண்டுக்கு ஒருமுறை, உயர் போலீஸ் அதிகாரிகள் துறைரீதியான ஆய்வுப்பணிகள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, குமரி மாவட்டத்தில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. தினகரன், போலீஸ் நிலையங்கள், மற்றும் பல்வேறு பிரிவுகளில் வருடாந்திர ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் டி.ஐ.ஜி. தினகரன் நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள மாவட்ட ஆயுதப்படை பிரிவுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் முன்னிலையில் நடந்த இந்த ஆய்வின்போது, அந்த வளாகத்தில் ஏற்கனவே தயாராக கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்த போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள், மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், வஜ்ரா வாகனம், போலீஸ் மீட்பு வாகனம் உள்ளிட்டவற்றை டி.ஐ.ஜி. தினகரன் ஆய்வு செய்தார்.
அப்போது, வாகனங்களை இயக்க சொல்லியும், அதற்கான ஆவணங்களை சரிபார்த்தும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.
அணிவகுப்பு மரியாதை
மேலும் போலீசாருக்கு வழங்குவதற்காக வைத்திருந்த சீருடை பொருட்களும் மைதானத்தில் ஆய்வுக்கு வைக்கப்பட்டிருந்தன. அதையடுத்து ஆயுதப்படை பிரிவில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
முன்னதாக, நேற்று காலை 7 மணி அளவில் ஆயுதப்படை மைதானத்துக்கு வந்த போலீஸ் டி.ஐ.ஜி. தினகரனுக்கு, ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர். இந்த அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டு ஆய்வு பணிகளை தொடர்ந்தார்.
உடற்பயிற்சி அவசியம்
பின்னர் போலீசாரிடையே பேசிய டி.ஐ.ஜி. தினகரன் கூறியதாவது:–
போலீசாருக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியமானது. தினமும் 1 மணி நேரம் போலீசார் கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியமே மன ஆரோக்கியம். நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம் பிள்ளைகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர நம்மால் தொடர்ந்து உழைக்க முடியும்.
‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்‘ என்பது போல் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் உழைத்து, நம்மை சேர்ந்தோரை உயர்த்த முடியும். எனவே, ஒவ்வொரு போலீசாரும் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அலுவலக நிர்வாகப்பிரிவு உள்பட அமைச்சு பணியாளர்கள் பிரிவுகளை அவர் ஆய்வு செய்து பதிவேடுகளையும் சரிபார்த்தார்.
ஆய்வு பணியின் போது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜவேலு, ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு தாண்டீஸ்வரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.