வேலைவாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

வேலைவாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2016-12-21 21:15 GMT
கூத்தாநல்லூர்,

வேலைவாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

4 பேருக்கு வலைவீச்சு

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் சச்சுவாடி இரட்டை தெருவை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி ஜெயலட்சுமி(வயது36). இந்தநிலையில் ஜெயலட்சுமியின் உறவினர் ராமகிருஷ்ணன்(60), அவரது நண்பர்களான சென்னையை சேர்ந்த ரமேஷ்(40), மணிவண்ணன்(45), ராமமூர்த்தி(46) ஆகிய 4 பேரும் சேர்ந்து சென்னையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி கடந்த 7-1-2015-ந்தேதியன்று ஜெயலட்சுமியிடம் ரூ. 2 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் 4 பேரும் சொன்னபடி ஜெயலட்சுமிக்கு வேலைவாங்கி தரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் 4 பேரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் 4 பேரின் செல்போனும் சுவீட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து ஜெயலட்சுமி வடபாதிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமிக்கு வேலைவாங்கி தருவதாக கூறி ரூ. 2 லட்சம் மோசடி செய்த 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்