வேளாங்கண்ணியில் 9 மாத பெண் குழந்தை கடத்தல் போலீசார் விசாரணை

வேளாங்கண்ணியில் 9 மாத பெண் குழந்தை கடத்தல் போலீசார் விசாரணை

Update: 2016-12-21 21:14 GMT
வேளாங்கண்ணி,

தூத்துக்குடி லயன்ஸ் டவுன் மினிசகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெரோம். இவருடைய மனைவி சுகன்யா. இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் சம்பவத்தன்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு பிரார்த்தனை செய்ய வந்தனர். அப்போது மாதாகுளம் அருகே ஜெரோமும், சுகன்யாவும் ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவரது குழந்தையை யாரோ கடத்தி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஜெரோம்வேளாங்கண்ணி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட பெண் குழந்தை குறித்து தகவல் தெரிந்தால் சென்னை தெற்கு மண்டல சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு 044-28512506, தஞ்சாவூர் சரக சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு 04362-227585, நாகை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் 9498104275, நாகை சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் 04365-220960 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்