10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 26-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி

தஞ்சாவூர்,
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் தெரிவித்தார்.
பேட்டி
இது தொடர்பாக அவர், தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பருவமழை பொய்த்துள்ளது. வரலாறு காணாத வகையில் வறட்சி நிலவுகிறது. கர்நாடகஅரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்த காரணத்தால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலைமை உள்ளது. சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரண பணிகளை தொடங்க வேண்டும்.
ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டு திட்ட இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் நாள் ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சாகுபடி செலவை மானியமாக வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொப்பரை தேங்காய்க்கு கிலோ ரூ.120 விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம்
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக 26-ந் தேதி நடைபெறும் முற்றுகை போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தஞ்சை கீழராஜவீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் தலைமை தாங்கினார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் சுகுமாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மாவட்ட தலைவர் கிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.