பாபநாசம் நீதிமன்றத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்

பாபநாசம் நீதிமன்றத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்

Update: 2016-12-21 22:45 GMT
பாபநாசம்,

பாபநாசம் நீதிமன்றத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய தொழில் சங்க மையம், அனைத்து இந்திய மாதர் சங்கம், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் பாபநாசத்தில் இயங்கி வரும் நீதிமன்றத்தை பெருமாங்குடி கிராமத்திற்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது உள்ள பழைய இடத்திலேயே புதிய கட்டிடத்தை கட்டக்கோரியும், பாபநாசம் புதிய பஸ் நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் காதர் உசேன் தலைமை தாங்கினார். அகில இந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி உண்ணா விரதத்தினை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் மனோகரன் பேசினார்.

இதில் மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், அகில இந்திய மாதர் சங்க துணைத்தலைவர் விஜயாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சதாசிவம், உமாபதி, கணேசன், சீனிவாசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி உண்ணாவிரதத்தினை முடித்து வைத்தார்.

மேலும் செய்திகள்