அரியலூர் மருத்துவமனையில் அரசு தலைமை கொறடா ஆய்வு

அரியலூர் மருத்துவமனையில் அரசு தலைமை கொறடா ஆய்வு

Update: 2016-12-21 22:30 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள அம்மா உணவகத்தில் அரசு தலைமைக்கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர் உணவுகளை சாப்பிட்டு பார்த்து பரிசோதித்தார். அப்போது மக்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும், சாம்பார் சாதத்தில் காய்கறிகளை கூடுதலாக சேர்க்க வேண்டுமென சமையலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்ட போது மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மண்சாலைகளை மாற்றி சிமெண்டு சாலை அமைத்து தரவேண்டுமென கேட்டுக் கொண்டார். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கொறடா தெரிவித்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் வாந்தி, மயக்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள குணமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு ஹார்லிக்ஸ் உள்ளிட்டவைகளை வழங்கினார். ஆய்வின் போது ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் செந்தில், கல்லங்குறிச்சி பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்