திருமானூரில் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரி சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

திருமானூரில் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரி சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2016-12-21 22:45 GMT
திருமானூர்,

முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரி சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையம் அருகே சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சமூக ஆர்வலர் பாளை.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர், மல்லிகை சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருமானூர் யூனியன் முன்னாள் தலைவர் கருப்பையா, அரியலூர் இலக்கிய பேச்சாளர் கலியபெருமாள், நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தை சேர்ந்த வரதராஜன், கணேசன், பஞ்சநாத கணபதி, வக்கீல்கள் பாக்கியராஜ், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உதவித்தொகை

இந்த ஆர்ப்பாட்டத்தில் வீடு, நிலம் மற்றும் மகன் உள்ள முன்னாள் அரசு அதிகாரிகள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதை போல முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். பெரிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் 60 வயதை கடந்த அனைவருக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என கூறியது போல் தர வேண்டும்.

சட்டத்தை காண்பித்து வழங்கிய உதவித்தொகையை தள்ளுபடி செய்வதும், புதிய 60 வயது முடிந்த முதியவர்களுக்கு உதவித்தொகை தர மறுக்கும் சட்டத்தை நீக்க வேண்டும். வேலையின்றி தவிக்கும் அன்னிமங்கலம் பாளையபாடி அரண்மனைக்குறிச்சி கிராமமக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்