காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்தா புயலால் ரூ.271 கோடி இழப்பு அதிகாரி தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்தா புயலால் ரூ.271 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் தெரிவித்துள்ளார். குடிசைகள் சேதம் காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:– காஞ்சீபுரம் மாவட்டத்
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்தா புயலால் ரூ.271 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
குடிசைகள் சேதம்காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்தா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை புனரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதிகளில் சீரமைப்பு பணி முடிந்து 100 சதவீதம் மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.
புயலால் முழுமையாகவும், பகுதியாகவும் 7 ஆயிரத்து 135 குடிசைகள் சேதம் அடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் 2 ஆயிரத்து 300 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. இதுவரை 496 பயனாளிகளுக்கு நிவாரணம் காசோலையாகவும், வங்கிக்கணக்கில் நேரடியாகவும் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.271 கோடி இழப்புசுகாதாரத்துறை மூலமாக 759 மருத்துவ முகாம்களும், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 20 கால்நடை மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 100 சதவீதம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மின்சார வாரியம் மூலம் 8 ஆயிரத்து 331 மின் கம்பங்களும், 127 டிரான்ஸ்பாரம்களும் சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த வார்தா புயலால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.271 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் குழுவினர் விரைவில் பாதிப்படைந்த இடங்களை பார்வையிட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.