திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 38,900 பேர் பயன் பெற்றுள்ளனர் அமைச்சர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 38,900 பேர் பயன் பெற்றுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மருத்துவ முகாம்கள் வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. திருவள்ளூ

Update: 2016-12-21 22:00 GMT

பெரியபாளையம்

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 38,900 பேர் பயன் பெற்றுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மருத்துவ முகாம்கள்

வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் மல்லியங்குப்பம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கால்நடை மருத்துவ முகாம், தூய்மைப்பணி ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

இதற்கு கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:–

திருவள்ளூர் மாவட்டத்தில் வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் இருக்க 14–ந் தேதி முதல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 46 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீர்நிலைகளில் குளோரின்

இந்த முகாம்கள் மூலம் இதுவரை 38 ஆயிரத்து 900 பேர் பயன் அடைந்து உள்ளனர். பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 344 செவிலியர் பயிற்சி மாணவர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மாவட்டத்தில் 56 குழுக்கள் மூலம் 492 நீர்நிலைகளில் குளோரின் கலக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 526 கிராம ஊராட்சிகள் முழுமையாக சுத்தம் செய்யும் பணி 19–ந் தேதி தொடங்கி 23–ந்தேதி வரை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், சோழவரம் ஒன்றிய முன்னாள் தலைவர் கார்மேகம், ஆரணி கூட்டுறவு சங்க தலைவர் தயாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்