தாய், மகளை தாக்கிய என்ஜினீயர் கைது
பொன்னேரியை அடுத்த கனகவல்லிபுரத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 30). இவரது மனைவி மகாலட்சுமி (26). அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரான பிரசாத் (21), மகாலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார். பின்னர் அவர் மகாலட்சுமியின் வீட்டுக்கு சென்று அவரையும்
பொன்னேரி,
பொன்னேரியை அடுத்த கனகவல்லிபுரத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 30). இவரது மனைவி மகாலட்சுமி (26). அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரான பிரசாத் (21), மகாலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார். பின்னர் அவர் மகாலட்சுமியின் வீட்டுக்கு சென்று அவரையும் அவரது தாயாரையும் கைகளால் தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்து பொன்னேரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.