அவினாசி, ராக்கியாபாளையத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,135 கடைகளிலும் நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னுரிமை பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து கடைகளுக்கும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, க

Update: 2016-12-21 22:15 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,135 கடைகளிலும் நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னுரிமை பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து கடைகளுக்கும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, களத்தணிக்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப அட்டைகளில் 86 சதவிகித ரேஷன் கார்டுகளில் குடும்பத்தலைவர்களின் செல்போன் எண்ணும் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் 79 சதவிகித உறுப்பினர்களின் ஆதார் விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவினாசி, திருமுருகன் பூண்டி, ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க ரேஷன் கடைக்கு சென்று இந்த பணிகளின் குறித்த செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, திருமுருகன்பூண்டி, பாரதி நகரில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் சேமித்து வைத்துள்ள குடிநீர் தொட்டிகளையும் மற்றும் சுகாதார பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பகுதியில் உள்ளவர்களிடம் சுகாதாரத்தை எவ்வாறு பேணி பாதுகாப்பது என்பது குறித்தும் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன், அவிநாசி தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்