போளூரில் போக்குவரத்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

போளூர் காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி போளூரில் நடந்தது. போளூர் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமை தாங்கி, போக்குவரத்து விழிப்புணர்வு து

Update: 2016-12-21 21:15 GMT

போளூர்,

போளூர் காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி போளூரில் நடந்தது. போளூர் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமை தாங்கி, போக்குவரத்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

துண்டுபிரசுரத்தில், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது கண்டிப்பாக தலைகவசம் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தில் 2 நபர்களுக்கு மேல் பயணிக்க கூடாது. மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்ட கூடாது. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டகூடாது. மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்யக்கூடாது என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிருந்தன.

தொடர்ந்து இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பு விளக்குகள் ஒளிரும்போது எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க வாகனங்களின் முகப்பு விளக்குகளின் நடுவில் கருப்பு ஸ்டிக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் ஒட்டினார். தொடர்ந்து போலீசார் அந்த வழியாக வந்த பஸ், கார், மினிவேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்குகளின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.

நிகழ்ச்சியில் போளூர் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்