சேதுபாவாசத்திரம் கடலோர பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

சேதுபாவாசத்திரம்,
சேதுபாவாசத்திரம் கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
தீவிரவாத தடுப்பு ஒத்திகை
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த ஒத்திகைக்கு சஜாக் ஆப்ரேஷன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு குழும துணை சூப்பிரண்டு குமரவேல், இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், வில்வநாதன் ஆகியோர் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு சொந்தமான ரோந்து படகில் கடலுக்குள் சென்று தீவிரவாத நடமாட்டம் குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சோதனை
அப்போது கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா என சோதனை செய்தனர். அப்போது மீனவர்களிடம் கடலில் சந்தேகப்படும் படி வெளியாட்கள் நடமாட்டம் இருந்தாலோ அல்லது சந்தேகப்படும்படியான பொருட்கள் காணப்பட்டாலோ உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்
முன்னதாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். 6 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற்று வந்த அம்லா ஆப்ரேஷன் நிறுத்தப்பட்டு தற்போது மாதம் ஒரு முறை சஜாக் ஆப்ரேஷன் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.