லாபகரமாக இயங்கும் சேலம் உருக்காலையை, தனியாருக்கு தாரைவார்க்க விடமாட்டோம் சேலம் ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு

சேலம்,
லாபகரமாக இயங்கும் சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்க விடமாட்டோம் என்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கக்கூடாது, விவசாயிகள் நலன் காத்திட காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை மக்கள், வணிகர்களை முடக்கும் மத்திய பாரதீய ஜனதா அரசின் செயலை கண்டித்து, சேலத்தில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் கே.கந்தசாமி, கோவை தங்கம், ஆறுமுகம், சக்திவடிவேல், பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், அன்பழகன், குலோத்துங்கன், தலைமை நிலைய செயலாளர் அசோகன், சீனிவாசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் உலகநம்பி, மாநில செயலாளர் வக்கீல் செல்வம், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ், இளைஞர் அணி பொதுச்செயலாளர் ரகுநந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் மத்திய மாவட்ட தலைவர் ரவிவர்மா, மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் காளிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது ஜி.கே.வாசன் பேசியதாவது:-
38 நாட்கள் ஆகியும் தீரவில்லை
இந்தியாவில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஒரு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பணத்தட்டுப்பாட்டால் ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் அரசாக பாரதீய ஜனதா செயல்பட்டு வருகிறது. பணப்பிரச்சினையில் பாரதீய ஜனதா அரசின் தவறான நடவடிக்கை, திட்டமிடலும், முன் எச்சரிக்கையும் சரியில்லாத காரணத்தால் வங்கிகளிலும் பணம் இல்லை. 38 நாட்கள் ஆகியும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. மக்கள் மீதான சுமையை குறைப்பதற்கு பதிலாக மீண்டும் ஏற்றி வைத்தாற்போல உள்ளது. தினமும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று படாதபாடு படுகிறார்கள். பெட்டிக்கடைக்காரர், விவசாயிகள், வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியாருக்கு தாரைவார்க்க கூடாது
சேலம் உருக்காலைக்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. நிலம் கொடுத்தவர்களுக்கு இதுவரை வேலை வழங்கவில்லை. இந்த ஆலையில் 2 ஆயிரம் ஊழியர்களும், மறைமுகமாக 5 ஆயிரம் ஊழியர்களும் பயன்பெறுகிறார்கள். தொடர்ந்து லாபகரமாக இயங்கும் சேலம் உருக்காலையை மத்திய பாரதீய ஜனதா அரசு, சில கோடிகளுக்காக தனியாருக்கு தாரைவார்க்க முயற்சித்து வருகிறது. இதை த.மா.கா. ஒருபோதும் அனுமதிக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் ஜி.கே.வாசன் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-
தமிழகத்தில் விவசாயிகள் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கண்டு கொள்ளாத அரசாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறது. எனவே, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தீர்வு காணப்பட வேண்டும். உயிர் இழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு நிதியுதவியும், பாதிப்புக்குள்ளான நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு செவிசாய்க்க வில்லை.
உள்கட்சி விவகாரம்
தமிழகத்தில் அ.தி.மு.க.வில் நிலவிவரும் பிரச்சினைகள், சசிகலாவை முதல்-அமைச்சர் ஆக்கிட வேண்டும் என்ற அமைச்சர்களின் கோரிக்கைகள் எல்லாம் அவர்களின் உட்கட்சி விவகாரம் ஆகும். எனவே, அதில் த.மா.கா. தலையிட விரும்பவில்லை.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் விஜயவர்மன், மகளிர் அணி நிர்வாகிகள் பேபியம்மாள், சிந்தாமணி, முன்னாள் எம்.பி. தீர்த்தராமன், ஓமலூர் வட்டார தலைவர் ராஜேந்திரன், நகர தலைவர் மணிகண்டன், மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சஜூ, பொருளாளர் ராஜேஸ்வரன் மற்றும் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை மாவட்ட நிர்வாகிகள் உள்பட திரளான த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.