ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டெல்லி,
டெல்லியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 34-வது லீக் போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மும்பை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.
டெல்லி, மும்பை இரு அணிகளும் ஒரே மாதிரியாக தலா 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.
இளமையும், அனுபவமும் கொண்ட டெல்லி அணி தனது கடைசி 3 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
மேலும் இவ்விரு அணிகளும் ஏற்கனவே மும்பையில் சந்தித்த ஆட்டத்தில், டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்தது.
இதே போல் மும்பை அணி முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவை தோற்கடித்து இருந்தது. அதே உத்வேகத்துடன் இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.