தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா - 2 விருதுகளை வென்ற 'ஜெய்பீம்'

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் விருதுகள் பட்டியல் வெளியான நிலையில் ,ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன .

Update: 2022-05-03 11:46 GMT

நடிகர் சூர்யா நடிப்பில்  ,கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள  திரைப்படம் ஜெய் பீம்.  இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.இந்த படத்தின் வெற்றியால் பல , விருதுகளும் கிடைத்தன .

இந்நிலையில் 12 வது  தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில், விருதுகள் பட்டியல் வெளியான நிலையில் ,ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன .

சிறந்த படமாக ஜெய்பீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது ,மேலும் படத்தில் ராஜகண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் .இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் பகிர்ந்துள்ளது 

மேலும் செய்திகள்