இந்தி நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

நடிகர் தர்மேந்திரா தசைப் பிடிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Update: 2022-05-01 19:55 GMT
மும்பை,

இந்தி திரையுலகின் முன்னனி நடிகரான தர்மேந்திரா தியோல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் கரண் ஜோகரின் ‘ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக சில தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது குறித்த தகவலை தர்மேந்திரா ஒரு வீடியோ மூலமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனது உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இனி உடல்நலம் சார்ந்த விஷயங்களில் மிக கவனமாக இருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்