நாங்களும் உங்கள மாதிரிதான் 'பீஸ்ட்' டிரைலருக்கு வெயிட்டிங் - படக்குழு வெளியிட்ட புகைப்படம்..!

படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றின் புகைப்படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.;

Update:2022-03-31 16:07 IST
சென்னை,
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

'பீஸ்ட் ' படத்தின் டிரைலர்  வருகிற ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றின் படத்தை வெளியிட்டு 'நாங்களும் உங்கள மாதிரிதான் 'பீஸ்ட்' டிரைலருக்கு வெயிட்டிங் நண்பா' என்று பதிவிட்டுள்ளது. இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்