சூர்யாவின் 41-வது படத்தில் இணையும் கீர்த்தி ஷெட்டி

சூர்யா41-வதுபடத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார்

Update: 2022-03-29 11:59 GMT
சென்னை, 

பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த நந்தா,பிதாமகன் ஆகிய படங்கள் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. 

இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் தனது 41 ஆவது படத்தில் சூர்யா நடிக்க  உள்ளார். இதற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருக்கிறது .

இந்த கூட்டணியில் இணையவிருக்கும் கதாநாயகி குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது சூர்யா41 -வதுபடத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது

மேலும் செய்திகள்