நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனியார் முதலீடு 390 கோடி டாலர்

நடப்பு 2019-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி-ஜூன்) இந்திய ரியல் எஸ்டேட் துறையில் 390 கோடி டாலர் தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-04 07:20 GMT
தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் புதிய மற்றும் வளரும் நிறுவனங்களின் பங்குகளில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. இவ்வகை முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது.

ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் அரையாண்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில், ஒட்டுமொத்த அளவில் 390 கோடி டாலர் அளவிற்கு தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 26 சதவீதம் உயர்வாகும். இதில் வணிக அலுவலக திட்டங்கள் ஈர்த்த முதலீடு மட்டும் சுமார் 42 சதவீதமாக இருக்கிறது. இதே காலத்தில் சில்லரை வர்த்தக வளாகங்கள் 120 கோடி டாலரை ஈர்த்துள்ளன. மொத்த முதலீட்டில் (390 கோடி டாலர்) இவை 31 சதவீத பங்கு கொண்டுள்ளன.

பெருநகரங்களைப் பொறுத்தவரை மும்பை ரியல் எஸ்டேட் துறை அதிகபட்சமாக 105 கோடி டாலரை ஈர்த்துள்ளன.

2026-ஆம் ஆண்டுக்குள் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு 10,000 கோடி டாலரை (சுமார் ரூ.7 லட்சம் கோடி) எட்டும் என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

பங்கு வெளியீடுகள்

நல்ல வளர்ச்சி கண்ட பின் பல நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியீடுகளில் களம் இறங்குகின்றன. அப்போது அந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருக்கும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் தமது பங்குகளை விற்று விட்டு வெளியேறி விடுகின்றன.

மேலும் செய்திகள்