சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்..எதற்கு தெரியுமா ?
சமீபத்தில் பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது;
சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட்.இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது .சமீபத்தில் பீஸ்ட் படத்திலிருந்து அனிருத் இசையமைத்துள்ள ,'அரபிக் குத்து' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .குறைந்த நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இப்பாடலுக்கு திரைதுறையினர், ரசிகர்கள் என பலரும் நடனமாடி பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் இப்பாடல் குறித்தும் விஜய் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இப்பாடலை கேட்டு விஜய் சார் உங்களிடம் என்ன சொன்னார் என்ற கேள்விக்கு, இந்த பாடலை முன்பே படமாக்கிவிட்டார்கள். அதனால் விஜய் சார் இந்த பாடல் குறித்து என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, சமீபத்தில் தான் இதன் புரோமோ வீடியோ ஷுட் செய்தோம். அப்போது தான் விஜய் சார் தொலைபேசியில் “சூப்பர் பா. எழுதிக் கொடுத்ததிற்கு ரொம்ப தேங்க்ஸ் பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே” என்று கூறினார்.