இப்போதும் வாய்ப்பு கிடைத்தால் குத்து பாடல்களில் ஆட தயார்- சுஷ்மிதா சென்

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென் தனது ”குத்து பாடல்கள்” பற்றி பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

Update: 2022-02-24 05:41 GMT
புதுடெல்லி,

இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் பிரபலமாக இருந்தவர் சுஷ்மிதா சென். தனது 18 வயதிலேயே பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர். 10 ஆண்டுகள் இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அவருக்கு இப்போது 47 வயது ஆகிறது. இவர் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

பிரபல நடிகையான சுஷ்மிதா சென் பல மொழிகளில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகியாக வலம் வந்த போதே சில படங்களில் குத்து பாடல்களிலும் ஆடியுள்ளார். மெயின் குடி அஞ்சனி ஹூன் (ஜோர்), மெஹபூப் மேரே (ஃபிசா), தில்பார் தில்பார் (சிர்ஃப் தும்) போன்ற அவரது குத்து பாடல்கள் பெரிதும் பேசப்பட்டவை. இவர் தமிழில் ஷங்கர் இயக்கிய படமான முதல்வனில் வரும்  ஷகலகா பேபி... ஷகலகா பேபி... என்ற குத்து பாடலுக்கு ஆடி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இந்நிலையில், அவர் ஒரு பேட்டீயின் போது  குத்து பாடல்கள் குறித்து அவர் கூறியதாவது:-

எனது சினிமா வாழ்க்கையில் பல ஆண்டுகளாக  'குத்து பாடல்கள்' இடம்பெற்று உள்ளன. அதுகுறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னணி கதாநாயாகன் அல்லது கதாநாயகி படங்களில் குத்து பாடல்களில் ஆடினால் அது வெறுப்பாக பார்க்கப்பட்டது.ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் குத்து பாடல்களில் ஆடுவதற்கு  எப்போதும் தயாராக இருந்தேன். 

குத்து பாடல்களுக்கு நான் ஆட சம்மதித்ததால், என் முடிவுக்கு எதிராக எனது இரண்டு மேனேஜர்கள் என்னை விட்டு விலகிவிட்டனர். இசை என்பது இசை தான். மோசமான படமாக இருந்தாலும் அது உயிர்வாழும். இப்போதும் வாய்ப்பு கிடைத்தால் குத்து பாடல்களில் ஆட தாயாரக உள்ளேன்” என்று கூறினார்.

சுஷ்மிதா கடைசியாக ராம் மத்வானி இயக்கிய ஆர்யா 2 என்ற வெப் சீரிஸில் தனது குடும்பத்தை காப்பற்ற எதிரிகளை எதிர்த்து போராடும் தாயாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    

மேலும் செய்திகள்