நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா!
நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சென்னை:
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் சமீப காலங்களில் கொரோனா தொற்றுக்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு 2 நாட்கள் அறிகுறி இருந்ததாகவும், பரிசோதனையில் கொரோனா பாதித்துள்ளது தெரியவந்ததாகவும் கூறினார். மேலும் தான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்துகொளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.