புத்தாண்டில் மதுபான விற்பனையில் இறங்கிய பிரபல நடிகை

நடிகை நிதி அகர்வால் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிரங்கவைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்;

Update: 2022-01-04 05:27 GMT
சென்னை

தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நிதி அகர்வால். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.  நிதி அகர்வால்   தற்போது மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். 

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிரங்கவைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும் அந்த பிராந்தியை நன்றாக பருகலாம் என்றும் பேசியும் வீடியோ வெளியிட்டு உள்ளார்.  அதில் இந்தியாவின் மிகச்சிறந்த பிராந்தியான மார்பியஸ் ஒரு மாஸ்டர் பீஸ். தற்போது ஒரு அழகான கோப்பையுடன் வருகிறது, இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு சிப்பையும் சிறந்த முறையில் சுவைக்கலாம். என குறிப்பிட்டுள்ளார்.

நிதி அகர்வால் மது விளம்பரத்தில் நடித்தது சமூக ஆர்வலர்களை ஆத்திரப்படுத்தி உள்ளது. இளைஞர்களை நிதி அகர்வால் மது அருந்த தூண்டுவதாக வலைத்தளத்தில் பலர் விமர்சித்தும் கண்டித்தும் வருகிறார்கள்.



மேலும் செய்திகள்