கண்ணீருக்கு விடை கொடுங்கள்...! உருக்கத்துடன் 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் ஷில்பா ஷெட்டி

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2021-ல் தனக்கு நடந்த நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2021-12-31 09:09 GMT
மும்பை,

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த சில நாட்களுக்கு முன் ஆபாச படம் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய போலீசார் மும்பையில் உள்ள நடிகையின் வீட்டில் சோதனை நடத்தினர். வீசாரணையின் போது தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஷில்பா ஷெட்டி விளக்கமளித்தாக கூறப்படுகிறது.

மேலும் போலீசார் முன்னிலையில் அவர் தனது கணவரிடம், “உங்களால் குடும்பத்தின் நற்பெயர் கெட்டுப்போனது. தொழில்களில் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டனர். நிதி இழப்புகளும் ஏற்பட்டு உள்ளது. இத்தனை ஆண்டுகள் நான் சம்பாதித்த பெயரும் புகழும் பாதாளத்துக்கு சென்றுவிட்டது” என்று சொல்லி கதறி அழுதுள்ளார். போலீசார் தலையிட்டு சமரசம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தால் ஷில்பா ஷெட்டி மனமுடைந்து காணப்பட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பல திரை பிரபலங்கள தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 2021 ஆம் ஆண்டு குறித்து பதிவை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மற்றும் டுவிட்டர் பக்கங்களில், ‘மிக்ஸ்டு பேக்  ஆப் எமோஷன்’ என்ற தலைப்பில் தனக்கு நேர்ந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.  
   
அதில் “2021 ஆம் ஆண்டும் பல பிரச்சினைகளைச் சந்தித்தேன்.  நான் புன்னகை, கண்ணீர், சிரிப்பு, அணைப்புகள் என நிறையச் சந்தித்தேன். இருப்பினும், பல பிரச்சினைகளைக் கடந்து வந்தேன். 2021 ஆம் ஆண்டில் இருந்து விடை பெற்று புதிதாக தொடங்கியுள்ளேன். 

வருகிற 2022ஆம் பிரார்த்தனையுடன் இன்று மாலை நான் புத்தாண்டை நன்றாக தொடங்க உள்ளேன். எனது இலக்குகளை நோக்கிச் செல்ல முடிவு செய்துள்ளேன். கண்ணீருக்கு விடை கொடுத்து, 2022 ஆம் ஆண்டை வரவேற்கிறேன்’’ என்று பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்