அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.;

Update:2021-09-10 18:20 IST
அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
சென்னை,

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ‘அண்ணாத்த’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று  காலை படக்குழு வெளியிட்டது.  ரஜினி நிற்கும் அண்ணாத்த படத்தின் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர்  மாலை வெளியிடப்பட்டுள்ளது. 

நாடி நரம்பு முறுக்க, ரத்தம் கொதிக்க, அரங்கம் முழுக்க தெறிக்க, தொடங்குது ஓங்கார கூத்து என ரஜினிகாந்த் பேசும் வசனமும் இடம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்