பபூன் : சினிமா விமர்சனம்

காதலும், கடத்தலும் கலந்த கதை ”பபூன்” படத்தின் சினிமா விமர்சனத்தை பார்ப்போம்...

Update: 2022-09-29 02:29 GMT

வைபவ், மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்து இளைஞர். நாடகங்களில், 'பபூன்' வேடம் போடுபவர். வருமானம் இல்லாததால், வெளிநாடு சென்று சம்பாதிக்க விரும்புகிறார். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அந்த பணத்தை சம்பாதிக்க வைபவ் லாரி ஓட்டுகிறார். அவருடைய லாரியில் போதைப்பொருள் இருப்பதாக கூறி அவரையும், நண்பரையும் போலீஸ் கைது செய்கிறது. இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதை அறிந்து இருவரும் தப்பி ஓடுகிறார்கள். தலைமறைவாக இருக்கும் அவர்கள், கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி ஓட முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? என்பது, 'கிளைமாக்ஸ்.'

டைட்டிலுக்கு ஏற்ப படம் கலகலப்பாக ஆரம்பிக்கிறது. பின்னர் போதைப்பொருள், கடத்தல், அடிதடி, என படம், 'ஆக்‌ஷன்' ரூட்டுக்கு மாறுகிறது. வைபவுக்கு காதல், மோதல், நகைச்சுவை காட்சிகளுடன் கொஞ்சம் சோகமும் கலந்த கதாபாத்திரம். ரசித்து செய்திருக்கிறார். நண்பராக ஆந்தக்குடி இளையராஜா கலகலப்பூட்டுகிறார்.

இலங்கை தமிழ் பெண்ணாக அனகா. கதையில் திருப்பத்தை ஏற்படுத்துபவர் இவர்தான். தனபால் கதாபாத்திரத்தில் வரும் ஜோஜு ஜார்ஜ், மிரட்டலான வில்லன். அசோக் வீரப்பன் டைரக்டு செய்து இருக்கிறார். காதலும், கடத்தலும் கலந்த கதைகள் ஏற்கனவே பார்த்து ரசித்ததுதான். இருப்பினும் கலகலப்பானவர், இந்த பபூன்.

Tags:    

மேலும் செய்திகள்