நகைச்சுவை கலாட்டா நிறைந்த குடும்பப் படமாக, 'வீட்ல விசேஷம்'

சத்யராஜ், ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் நகைச்சுவை கலாட்டா நிறைந்த குடும்பப் படமாக, 'வீட்ல விசேஷம்' இருக்கும் என்று ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.

Update: 2022-06-13 09:04 GMT

போனிகபூரின் பே வியூ,புரொஜக்ட்ஸ் லிமிடெட், ஜீ ஸ்டுடி யோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம் வீட்ல விசேஷம்.

சத்யராஜ், ஊர்வசி, கே.பி, எஸ்.லலிதா. அபர்ணா பாலமுரளி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி இந்த படத்தில் நடித்து, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியும் உள்ளார்.

இதுகுறித்து ஆர். ஜே.பாலாஜி கூறியதாவது:

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் குடும்ப படங்களுக்கு என்றுமே தனி சிறப்பு உண்டு. அந்தவகையில் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் சிறந்த பொழுதுபோக்கு படமாகவும், அதே வேளை குடும்பம் குடும்பமாக பார்த்து ரசித்து கொண்டாடக் கூடிய படமாகவும் 'வீட்ல விசேஷம்' படம் வெளியாக இருக்கிறது. இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் தயாராகி இருக்கிறது.

இந்த படத்தில் சத்யராஜ்- ஊர்வசி இடையேயான காட்சிகள் மிகவும் கலகலப்பை ஊட்டும். ஒரு குடும்பத்தில் ஏற்படும் திடீர் திருப்பம், அதனால் ஏற்படும் அடுத்த கட்ட நகர்வுகளை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறோம். எந்த ஒரு ஆபாச மற்றும் சண்டை காட்சிகள் இல்லாமல், வயிறு வலிக்க சிரிக்கும் காமெடி சரவெடியாக இந்தப்படம் இருக்கப்போகிறது. நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாக எதிர்பார்ப்புக்கு மேலாகவே இந்தபடம் சிறப்பாக வந்திருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் நல்லதொரு வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்கள் இணையதளத்தில் விரும்பி கேட்கப்பட்டு வருகின்றன. ஒரு மாறுபட்ட கதை களத்தை மையாகக் கொண்டு எடுக்கப் பட்ட இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களை திருப்திபடுத்தும். குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து பார்த்து, சிரித்து, மகிழ்ந்து கொண்டாட கூடிய படமாக இந்த படம் நிச்சயம் இருக்கும் என்று ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்