3-ம் பாகமாக வரும் பேய் படம்
பீட்சா படத்தின் 3-ம் பாகம் ‘பீட்சா 3 மம்மி' என்ற பெயரில் உருவாகி உள்ளது;
பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அதிக பேய் படங்கள் வருகின்றன. சுந்தர்.சியின் அரண்மனை பேய் படம் 3 பாகங்கள் வந்தது. விஜய்சேதுபதி நடித்த 'பீட்சா' பேய் படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகமும் வெளியானது. தற்போது பீட்சா படத்தின் 3-ம் பாகம் 'பீட்சா 3 மம்மி' என்ற பெயரில் உருவாகி உள்ளது.
இதில் அஸ்வின் நாயகனாகவும், பவித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை மோகன் கோவிந்த் டைரக்டு செய்துள்ளார்.
அஸ்வின் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். அங்கு இரவு நேரத்தில் யாரோ இனிப்பு தயார் செய்து வைக்கும் நிலையில் அதன் பின்னணியில் சில மரணங்கள் நடக்கின்றன. இனிப்பு செய்வது யார் என்று அஸ்வின் ஆராயும்போது திகிலாகிறார்.
அதன்பிறகு நடக்கும் மர்மங்கள் என்ன என்பது கதை. பேய் படமாக தயாராகி உள்ளது. கவுரவ் நாராயணன், காளி வெங்கட், அபி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் ராஜ் இசையமைத்து உள்ளார்.