படமாகும் தெருக்கூத்து கலை...!

தெருக்கூத்து கலையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது

Update: 2023-08-18 07:59 GMT

`டப்பாங்குத்து' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா, ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்.முத்துவீரா டைரக்டு செய்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``தெருக்கூத்து கலையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. கரகாட்டத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் திருவிழா காலங்களில் தெருக்கூத்து ஆட்டம் ஆடுவார்கள். அதில் ராஜாராணி ஆட்டம், பேயாட்டம், டப்பாங்குத்து, கொலை சிந்து என்று விதவிதமாக தெருக்கூத்து ஆட்டம் ஆடி விடியும்வரை ரசிக்க வைப்பார்கள்.

அதை நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றி நின்று பார்த்து ரசிப்பார்கள். அந்தக் கலையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகி உள்ளது. இதில் பதினைந்து வகையான நாட்டுப்புற பாடலுக்கு சரவணன் இசையமைத் துள்ளார். கதை, திரைக்கதை, வசனம்: எஸ்.டி.குணசேகரன், எஸ்.ஜெகநாதன் மருதம் நாட்டுப்புற பாடல் என்ற நிறுவனத்துக்காக தயாரிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்