கதாநாயகியான விமான `பைலட்'

விமான பைலட் பிரார்த்தனா சுப்ரியா நாயகியாக அறிமுகமாகிறார்

Update: 2023-08-18 07:47 GMT

`சிரோ' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் பிரார்த்தனா சுப்ரியா நாயகியாக அறிமுகமாகிறார். இவர் விமான பைலட் பயிற்சி பெற்றவர். விவேக் ராஜாராம் டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ``தனித்துவமான கதைக்களம் மற்றும் திரைக்கதையால் இந்தப் படம் உருவாகிறது. `சிரோ' ஒரு கற்பனை கதாபாத்திரம், பெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு தேவதை.

நான் முதன் முறையாக பிரார்த்தனாவை சந்தித்தபோது, அவர் இந்த கதாபாத்திரத்துக்கு வலுவான நியாயம் செய்வார் என்று உணர்ந்தேன். படம் ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் வராது. ஒவ்வொரு 20 மற்றும் 25 நிமிடங்களுக்கு களம் மாறிக்கொண்டே இருக்கும்.

அடிப்படையில் பெண்கள் மிகப் பெரிய சக்தி கொண்டவர்கள். அவர்கள் தங்களை பாது காத்துக்கொள்ளும் தனித்துவமான குணத்தை கொண்டவர்கள் என்ற உண்மையை இந்தப் படம் மூலம் முன் வைக்க முயற்சிக்கிறோம்'' என்றார். படத்தை எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே சத்யராஜ் நடித்துள்ள `வெப்பன்' படத்தையும் தயாரித்து இருக்கிறார். ஒளிப்பதிவு: கிஷன் சி.வி.

Tags:    

மேலும் செய்திகள்