தி கிரேட் இந்தியன் கிச்சன்
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் பரதநாட்டியக் கலைஞராக ஐஸ்வர்யா ராஜேஷ்.
கேரளாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற மலையாள படம், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்.’ இந்த படம் அதே பெயரில் தமிழில் தயாராகி இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ராய் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக் கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், தள்ளிப் போகாதே ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் டைரக்டு செய்துள்ளார்.
‘‘படப்பிடிப்பு காரைக்குடியில் 25 நாட்கள் நடைபெற்றது. மீதமுள்ள காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன.
இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் பரதநாட்டியக் கலைஞராக நடித்து இருக்கிறார். அவருடன் 50 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற திருவிழா காட்சியை, பூந்தமல்லியில் அரங்கு அமைத்து படமாக்கினோம். படத்தின் உச்சக்கட்ட காட்சியாக அது படமாக்கப்பட்டது.
ஒரு பரதநாட்டிய ஆசிரியை சமையல் அறையில் படும் சிரமங்களே கதையின் கரு’’ என்று டைரக்டர் ஆர்.கண்ணன் கூறினார்.
‘‘வேறு ஒரு மொழியில் வந்த படத்தை ரீமேக் செய்வது எவ்வளவு பெரிய சுமை என்பது எனக்குத் தெரியும். இன்றைய சமூகத்துக்கு தேவையான படம் இது. பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்’’ என்றார், ஐஸ்வர்யா ராஜேஷ்.