கிருத்திகா இயக்கத்தில் காளிதாஸ்-தான்யா
நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராமும், நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா ரவிச்சந்திரனும் ஜோடியாக நடிக்கிறார்கள்.
கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராமும், நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா ரவிச்சந்திரனும் ஜோடியாக நடிக்கிறார்கள். இதுபற்றி கிருத்திகா உதயநிதி சொல்கிறார்:
‘‘வணக்கம் சென்னை, காளி படங் களுக்குப்பின், நான் இயக்கும் மூன்றாவது படம், இது. சிறந்த கதையாக அமைய வேண்டும் என்பதற்காக சிறிது காலம் எடுத்துக் கொண்டேன். அப்போது தோன்றியதுதான் இந்த படத்தின் கதை. இது, வாழ்வின் பயணத்தை பற்றிய கதை. இதில் பயணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
முதன்மை கதாபாத்திரங்களில், இளம் நடிகர்களை நடிக்க வைக்க முடிவு செய்தேன். அந்த கதாபாத்திரங்களுக்கு காளிதாஸ் ஜெயராமும், தான்யா ரவிச்சந்திரனும் கச்சிதமாக பொருந்தி இருந்தார்கள்.
ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் சார்பில் பெண்டலா சாகர் தயாரிக்கிறார்.