வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் பரபரப்பான திகில் படம்
டைரக்டர் வெற்றிமாறனும், பல வெற்றி படங்களை தயாரித்த எல்ரெட் குமாரும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள்.
‘ஆடுகளம்’, ‘அசுரன்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெற்ற டைரக்டர் வெற்றிமாறனும், பல வெற்றி படங்களை தயாரித்த எல்ரெட் குமாரும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள். இந்த படத்துக்கு, ‘விடுதலை’ என்று பெயர் சூட்டியிருக் கிறார்கள்.
இதில் விஜய் சேதுபதி, சூரி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வெற்றிமாறன் படங்களில் தொடர்ந்து பணிபுரியும் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கை நுனியில் அமரவைக்கும் பரபரப்பான திகில் படம், இது.
மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு அற்ற சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. விஜய் சேதுபதி, சூரி, வெற்றிமாறன் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் காட்டுப்பகுதியில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள்.