வரலாற்று பின்னணியில் சன்னி லியோன் நடிக்கும் நகைச்சுவை திகில் படம்
நகைச்சுவை-திகில் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்.
நகைச்சுவை, திகில் இரண்டும் சரிசம விகிதத்தில் கலந் திருக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. அந்த வகையில், வரலாற்று பின்னணியில் ஒரு நகைச்சுவை-திகில் படம் தயாராகிறது.
அதில், சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், சஞ்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். யுவன் டைரக்டு செய்கிறார். இவர், ‘சிந்தனை செய்’ படத்தை இயக்கியவர். டி.வி.சக்தி, கே.சசிகுமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
சென்னை, பெரம்பலூர் துறைமுகம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.