முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார் சரவணா ஸ்டோர் அதிபர் ஜோடியாக மாடல் அழகி
சரவணா ஸ்டோர் (ஜவுளிக்கடை) அதிபர் சரவணன் அவருடைய கடையின் விளம்பர படத்தில் மட்டும் நடித்து வந்தார்.
முதன்முதலாக அவர் ஒரு திரைப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்துக்கு, ‘லெஜண்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
சரவணன் ஜோடியாக மும்பை மாடல் அழகி ஊர்வசி ரவுத்துல்லா நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது.