அசால்ட்

‘அசால்ட்’ படத்தில் வடசென்னை தாதாக்களாக 3 கவர்ச்சி நடிகைகள்.

Update: 2021-03-25 15:29 GMT
‘காட்டுப்பய சார் இந்த காளி’, ‘மத்திய சென்னை’ ஆகிய படங்களில் நடித்த ஜெய்வந்த், ‘அசால்ட்’ என்ற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இது, கதாநாயகனை மையப்படுத்திய படம். தாதாக்களை பற்றிய கதை.

‘பருத்தி வீரன்’ சரவணன், சென்ட்ராயன், ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சோனா, ‘களவாணி’ புகழ் தேவி, ‘மைனா’ புகழ் நாகு ஆகிய மூன்று கவர்ச்சி நடிகைகளும் வடசென்னை தாதாக்களாக நடித்து இருக்கிறார்கள். பூபதிராஜா டைரக்டு செய்து இருக்கிறார். படத்தை பற்றி ஜெய்வந்த் கூறியதாவது:-

“இது, ஏற்கனவே குறும் படமாக வந்தது. இப்போது முழு நீள படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை ‘ரிலீஸ்’ செய்ய தியேட்டர் கிடைக்கவில்லை. அதனால் ஓடிடியில் ‘ரிலீஸ்’ செய்கிறோம்.”

மேலும் செய்திகள்