2 நண்பர்களுக்கும், ஒரு காதல் ஜோடிக்கும் இடையே நடக்கும் களங்கமற்ற கதையம்சம் கொண்ட படம், ‘செந்தா’. இந்த படத்தின் கதை எழுதி தயாரித்து அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார், வி.மணிபாய்.
பிரபு சாலமன், ‘மஞ்சப்பை’ ராகவன் ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக பணிபுரிந்த சகாய நாதன் டைரக்டு செய்து இருக் கிறார். புதுமுகங்கள் டிட்டோ, ஸ்ரீமகேஷ் நடிக்க, கதாநாயகியாக தீபா உமேஷ் நடித்துள்ளார். சென்னை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.