உண்மை சம்பவ கதையில் ஆனந்தி
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஒரு புதிய படம் தயாராகிறது. சாம் ஜோன்ஸ் கதாநாயகனாக நடித்து படத்தை தயாரிக்கிறார். கதாநாயகி, ஆனந்தி.
மதுரையை கதைக்களமாக கொண்ட இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. மோகன்ராஜாவிடம் உதவி டைரக்டராக இருந்த தாமரை செல்வன் டைரக்டு செய்து இருக்கிறார். படத்தின் கதையை சாம் ஜோன்சின் தந்தை எம்.ஜோன்ஸ் எழுதி இருக்கிறார்.
தெலுங்கு நடிகை சுலேகாவாணி, முனீஸ்காந்த், வேல.ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வில்லனாக பிரபல டைரக்டர் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.