நதி

உண்மை சம்பவம் படமாகிறது ஆனந்தி நடிக்கும் ‘நதி’ சினிமா முன்னோட்டம்.

Update: 2021-03-04 14:08 GMT
டைரக்டர் மோகன்ராஜாவிடம் உதவி டைரக்டராக இருந்தவர், தாமரைச்செல்வன். இவர், ‘நதி’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். ஒரு உண்மை சம்பவத்தை கருவாக வைத்து, இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதில் சாம் ஜோன்ஸ் கதாநாயகனாக நடிப்பதுடன் படத்தை தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். அவருடன் பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனீஷ்காந்த், வேல ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பிரபல டைரக்டர் ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

படப்பிடிப்பு மதுரை, தேனி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது மதுரையில் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்