பிரிந்த ஜோடி, மீண்டும் சந்தித்தபோது
“பதின்ம வயதில் சொந்த கிராமத்தை விட்டு சூழ்நிலையால் துரத்தப்படும் ஒரு ஆணும், பெண்ணும் நள்ளிரவில் நடுவழியில் பிரிய நேர்கிறது.
8 வருடங்களுக்கு பிறகு இருவரும் எதிர் எதிரான நிலையில் சந்திக்க நேர்கிறது. உயிரை எடுக்கின்ற இடத்தில் அவனும், உயிரை காப்பாற்றுகிற இடத்தில் அவளும் இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து நிகழும் சம்பவங்களை திரைக்கதையாக்கி இருக்கிறோம்” என்கிறார், ‘நெடுநீர்’ படத்தின் டைரக்டர் கு.கி.பத்மநாபன். அவர் மேலும் கூறுகிறார்:
“இந்த படத்தின் கதாநாயகன்-கதாநாயகியாக ராஜ்கிருஷ், இந்துஜா ஆகிய இருவரும் அறிமுகமாகிறார்கள். புதுமுகம் சத்யா முருகன் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். ஹித்தேஷ் முருகவேல் இசையமைக்க, பழனிபாரதி, கானா மெய்யழகன் ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். வி.எஸ்.பாளையம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ளார்.
படத்தில் 4 பாடல்களும், 6 சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரி, கடலூர், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் 51 நாட்கள் படம் வளர்ந்து இருக்கிறது”.