சிவப்பு மனிதர்கள்

‘சிவப்பு மனிதர்கள்’ படத்தில் ‘சில்க்’ சுமிதா பாணியில், சோனா

Update: 2021-02-28 01:22 GMT
மறைந்த நடிகை ‘சில்க்’ சுமிதா அரைகுறை உடை அணிந்து கவர்ச்சியாக நடனம் ஆடியதுடன், குணச்சித்திர வேடங்களில் நடித்தும் இருந்தார். அவரது பாணிக்கு தற்போதைய கவர்ச்சி நடிகை சோனா மாறியுள்ளார். இதுவரை அவரை கவர்ச்சி நடிகையாகவே பார்த்து இருக் கிறோம்.

முதல்முறையாக அவரை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் பார்க்கப் போகிறோம். ‘சிவப்பு மனிதர்கள்’ என்ற படத்தில், ரசிகர்களுக்கு இந்த இன்ப அதிர்ச்சி நிகழ இருக்கிறது. கதையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் வேடம், இது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக அன்பு சரவணன் அறிமுகம் ஆகிறார். பி.டி.அரசகுமார் தயாரிக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், மீனாட்சி சர்க்கார், அனுகிருஷ்ணா, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, ராஜசிம்மன், கஞ்சா கருப்பு, ஆதிஷ் பாலா, பெஞ்சமின், வேல்முருகன், சந்தியா, லோகஸ்ரீ, உமா ஆகியோர் நடிக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பற்றி சோனா கூறும்போது, “அலைகள் ஓய்வதில்லை படத்தில் சில்க் சுமிதா நடித்த வேடத்தைப்போல், ‘சிவப்பு மனிதர்கள்’ படத்தில், மிகச்சிறந்த வேடத்தில் நடிக்கிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்