வசந்த முல்லை

பாபிசிம்ஹாவின் வசந்த முல்லை சினிமா முன்னோட்டம்.;

Update:2021-02-04 15:34 IST
பாபிசிம்ஹா நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘வசந்த முல்லை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை குறும்பட இயக்குனர் ரமணன் புருசோத்தமா டைரக்டு செய்து வருகிறார். கதை, திரைக்கதையையும் இவரே எழுதியிருக்கிறார். பொன்னிவளவன், வசனம் எழுதியிருக்கிறார்.

“இது, ஒரு அதிரடியான திகில் படம். பாபிசிம்ஹாவுக்கு ஜோடியாக, ‘காஷ்மோரா’ கதாநாயகி பர்தேசி நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்-நடிகைகள் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.டி. எண்டர்டைன்மென்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின் றன. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடை பெறுகிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான ‘த்ரில்லர்’ விருந்து காத்திருக்கிறது” என்கிறார், டைரக்டர் ரமணன் புருசோத்தமா.

மேலும் செய்திகள்