பேய் மாமா

ஷக்தி சிதம்பரம் டைரக்‌டு செய்யும் அடுத்தப்படம் 'பேய் மாமா' வடிவேல் போய் யோகி பாபு வந்தார். படத்தின் முன்னோட்டம்.

Update: 2020-02-01 20:50 GMT
சார்லி சாப்ளின், என்னம்மா கண்ணு, மகா நடிகன், கோவை பிரதர்ஸ் உள்பட பல படங்களை டைரக்டு செய்தவர், ஷக்தி சிதம்பரம். இவர், `பேய் மாமா' என்ற புதிய படத்தை இயக்கப் போவதாகவும், இந்த படத்தில் கதாநாயகனாக வடிவேல் நடிப்பார் என்றும் அறிவித்து இருந்தார். இப்போது அந்த படத்தில் இருந்து வடிவேல் நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதில் யோகி பாபு நடிப்பார் என்றும் தகவல் வெளியானது.

இதுபற்றி டைரக்டர் ஷக்தி சிதம்பரம் சொல்கிறார்:-

``நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். நான் இயக்கும் `பேய் மாமா' படத்தில் வடிவேல் நடிக்கவில்லை. அவருக்கு பதில் யோகி பாபு நடிக்கிறார். இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். பேய் விரட்டும் ஒரு திருட்டு கும்பலை சேர்ந்தவர், யோகி பாபு. ஒரு பெண்ணுக்கு பேய் விரட்டுவதற்காக அந்த கும்பல் போகிறது. அங்கே ஆள் மாறாட்டம் நடக்கிறது. பேய் பிடித்த பெண்ணுக்கு பதில் வேறு ஒரு பெண் ணை சந்திக்கிறார்கள்.

அப்போது, யோகி பாபுவை பேய் பிடித்துக் கொள்கிறது. ``உன்னை பேய்க்காவது பிடித்து இருக்கிறதே...அதை விடாதே...கெட்டியாக பிடித்துக் கொள்'' என்கிறார், யோகி பாபுவின் அம்மா செந்தி. பேயும், யோகி பாபுவும் என்ன ஆகிறார்கள்? என்பதே இந்த படத்தின் தமாசான கதை. படத்தில், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சிங்கம் புலி, சாம்ஸ், சாமிநாதன், ரமேஷ்கண்ணா, இமான் அண்ணாச்சி, கோவை சரளா உள்பட 28 நகைச்சுவை நடிகர்கள் பங்கு பெறுகிறார்கள். ஏலப்பன் தயாரிக்கிறார்.

பெரும்பகுதி படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. சென்னை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.''

மேலும் செய்திகள்